Sunday, July 4, 2010

பெட்ரோலின் உற்பத்தே விலை 16.50 நாம் கொடுப்பதோ 53 .55

நாட்டிற்கு  தேவையான அத்யவச்யமான பொருள்களில் ஒன்று எரிபொருள்கள். ஏழை எளிய மக்களாக இருந்தால் மண்ணெண்ணெய் உபயோகிப்பார்கள். நடுத்தர மற்றும் மேல்தட்டு மக்களாக இருந்தால் சமையல் எரிவாயு உபயோகிக்கேரார்கள். அனைவரும் குறைந்தபட்சம் இருசக்கர வாகனம் வைத்து இருக்கிறார்கள்.  எல்லாவற்றிக்கும் மேலாக மக்களுக்கு
தேவையான அத்யவச்ய பொருளாக  எரிபொருள் என்பது அனைத்து தட்டு மக்களும் உபயோகிக்கும் ஒன்றாக ஆகிவிட்டது.

                                     ஆனால் மத்திய அரசோ இதைபற்றி எல்லாம் கவலைபடாமல் எரிபொருள்  விலை ஏற்றம் தவிர்க்க முடியாதது என கதை அடித்து வருகிறது. ஆனால் உண்மை நிலை என்ன என்று நாம் சற்று சிந்தேத்தாலே நமக்கு புரிந்துவிடும். ஆனால் அதை செய்ய தான் நமக்கு நேரம் இல்லை. இதன் உண்மை நிலை பற்றி விளக்குவதற்காகவே இந்த பதிப்பு.

                                                              இன்றைய நிலவரபடி ஒரு பீப்பாய் கச்சா என்னை விலை 72 டாலர் கொடுத்து வாங்குகிறார்கள். அந்த ஒரு பீப்பாய் கச்சா  எண்ணையில் 17 லிட்டர் பெட்ரோல் மற்றும் 8லிட்டர் டீசல் எடுக்கபடுகிறது. இதுவரை செலவு அதிகம் பிடிப்பதில்லை. இதன் பிறகு பிறகு தான் நாம் கவனிக்க வேண்டிய விஷயம் இருக்கிறது. அது என்னவென்றால் மொத்தமாக
ஒரு லிட்டர் பெட்ரோல் உற்பத்திக்கு ஆகும் செலவு      16.50 P 
     
அரசின் வரி விவரம் 
ஒரு லிட்டர் பெட்ரோல் உற்பத்திக்கு ஆகும் செலவு      16.50 P 
        மத்திய அரசின் வரி அதாவது CENTRAL GOVERMENT TAX =11.80P
      சுங்க வரி =9.75  
    மாநில அரசு வரி =8 RS  
    வாட் வரி =   4RS
   ஆக ஒரு லிட்டர் பெட்ரோல் 16.50 என்றாள் அதற்க்கு வரியாக நாம் 33 ரூபாய் 55 பைசா வரியாக கட்டுகிறோம். மிகவும் அத்யவச்யமான பொருளுக்கு எவ்வளவு  வரி விதிக்கிறோமே  என்று எந்த அரசாங்கமாவது கவலைபட்டதுண்டா?
இது எல்லாம் போதாது என்பதை போல நாட்டின் பிரதமமந்திரியே  எரிபொருள் விலை ஏற்றம் தவிர்க்க முடியாதது என கூறுகிறார். நாட்டின் எளிய  மக்களின் நிலையை பற்றி ஆட்சியில்  இருப்பவர்கள் கவலை பட்டிருந்தால் அவர்கள் இவ்வாறு விலையை ஏற்றி இருப்பார்களா?  நாம் நாட்டில் தான் மதுபானத்திற்கு  போடும் வரியை விட அத்யாவச்ய பொருளான எரிபொருளுக்கு அதிகம் .  
                                             இதே மத்திய அரசு தான் இதற்கு முந்தய ஆட்சி காலத்தில் கச்சா என்னை விலை உயர்ந்த போது பெட்ரோல் டீசல் விலையை உயர்த்தியது. ஆனால் சர்வதேச சந்தையில் குறைந்த போது விமான எரிபொருளின் விலையை குறித்ததே தவற மற்றவையின் விலையை குறைக்கவில்லை. எப்பொழுது மேல் கூறிய விஷயத்தில் இருந்து ஒன்று புரிந்திருக்கும். இந்த காங்கிரஸ் அரசு  மேல்தட்டு மக்களின் பாதுகவலானாக இருக்கிறதே தவிர எளிய மற்றும் நடுத்தர மக்களின் பக்கம் இல்லை.

மற்ற நாட்டின் பெட்ரோல் விலை நிலவரம்
அமெரிக்கா நாட்டில் ஒருடாலருக்கு  1.6 லிட்டர் பெட்ரோல்,
கியூபா நாட்டில் ஒரு லிட்டர் பெட்ரோல்    19 RS ,
பங்களாதேஷில் ஒரு லிட்டர் பெட்ரோல் 22 RS ,
பர்மா நாட்டில் ஒரு லிட்டர் பெட்ரோல் 30RS,
கடார் நாட்டில் ஒரு லிட்டர் பெட்ரோல் 30RS ,
நேப்பால் நாட்டில் ஒரு லிட்டர் பெட்ரோல் 34RS ,
அப்கானிஸ்தான் நாட்டில் ஒரு லிட்டர் பெட்ரோல் 36RS ,

                                            இந்த விலை பட்டியலை பார்த்தாலே உங்களுக்கு புரிந்திருக்கும்.மற்ற நாடுகளில் அத்யாவச்ய பொருட்களுக்கு கொடுக்கும் மரியாதையை. ஆனால் நாம் நாட்டில் தான் எரிபொருளின் விலையையும் ஏற்றுவார்கள். ஆனால் அதே சமயம் விலைவாசியையும் குறைக்க நடவடிக்கை எடுக்கபட்டு வருகிறது என கதையும் சொல்லுவார்கள். அதை கேட்பதற்கு தான்   நாம் இருக்கிறோமே. என்ன வேண்டுமானாலும் சொல்லுவார்கள்.

                                    நாம் இந்தியாவை பொறுத்தவரை ஒருவர் 5 ஆண்டு களம் ஆட்சி செய்தால் அடுத்த 5 ஆண்டை வேறு ஒரு கட்சி ஆட்சி செய்தல் தான் அது நாட்டிற்கும் நல்லது நாட்டு மக்களுக்கும் நல்லது.இல்லை என்றாள் இது போன்ற துன்பங்களை நாம் கண்டிப்பாக எதிர்கொள்ள வேண்டியதிருக்கும்.  

                                                          இந்த விலை உயர்வை கண்டித்து எதிர் கட்சிகள் திங்கள் அன்று பந்த் நடத்துகிறது. நாம் அந்த கட்சிகளுக்கு விசுவாசமாக  இல்லை என்றாலும் நாம் நாம் எதிப்பை தெரிவிக்க நாம் கலந்து  கொள்வது ஒரு இன்றியமையாத விஷயமாகிறது. அப்பொழுது தான் அரசுக்கு மக்கள் மீது ஒரு சிறிய பயமாவது வரும்.              
 
இந்த பதிவு உங்களை கவர்ந்திருந்தால் தமிழ்மணம்&தமிழ்ஷ் சில் ஓட்டளிக்கவும்.
உங்கள் ஓட்டு  எங்களை மேலும் எழுத உற்சாகபடுத்தும். 
                 

3 comments:

Anonymous said...
This comment has been removed by a blog administrator.
Anonymous said...

what u said is rite

Anonymous said...

சரியான விளக்கம். மக்களுக்கு எங்கே புரிகிறது

Post a Comment