Tuesday, June 29, 2010

இன்ஷூரன்ஸ் படுத்தும் பாடு

இன்ஷூரன்ஸ் படுத்தும் பாடு


                                                                       அன்பு நண்பர்களுக்கு வணக்கம். இன்றைய காலகட்டத்தில் மக்கள் அனைவரும் ஏதாவது ஒரு காப்பீடு எடுக்கின்றனர்.அது வாகனக் காப்பீடோ,ஆயுள்,மருத்துவ...இப்படி ஏதாவது ஒரு காப்பீடு கண்டிப்பாக எடுத்திருப்பர்.இதில் நான் தற்போது ஆயுள் காப்பீடு பற்றி கூற இருக்கிறேன்.அதிலும் தற்போது 5,6 வருடமாக மிக ப்ரபலாமாக இருக்கும் யூலிப் பற்றி காண்போம். அது என்ன யூலிப்? யூலிப் என்பது unit linked insurance plan
என்பதின் சுருக்கமே.இதில் திரட்டப்படும் முதலீடுகளில் பெரும் பகுதி பங்கு சந்தையில் முதலீடு செய்யப்படும்.இந்த விபரம் தற்போது போதும். இந்த யூலிப் வகை இன்ஷூரன்ஸ்களில் முதலீடு செய்யலாமா? இக்கேள்விக்கு பதில் கேள்வி கேட்பவரை பொருத்து மாறுபடும். 1.பங்கு சந்தை சார்ந்தது என்பதால் பங்கு சந்தை பற்றியும்,அதன் ஏற்ற இறக்கங்கள் பற்றியும்,நாட்டின் பொருளாதார வளர்ச்சி பற்றி ஓரளவாவது அறிந்தவறே இதில் முதலீடு செய்யவேண்டும். 2.எந்த திட்டத்தில் முதலீடு செய்கிறோமோ அதை பற்றிய அந்நிறுவனம் தரும் எழுத்துப்பூர்வமான விளக்கத்தை நன்கு படித்து அதில் தெளிவு பெற்றிருக்கவேண்டும். 3.அவ்வப்போது செய்த முதலீட்டின் வளர்ச்சியை கவனிப்பவராக இருக்கவேண்டும் 4.மேற்கண்ட தகுதிகள் இல்லாதவர் கண்டிப்பாக இதில் முதலீடு செய்யக்கூடாது. மூன்று ஆண்டுகளில் இரட்டிப்பு ஆகுமா? இன்றைய ஆயுள் காப்பீட்டு முகவர்களின் தாரக மந்திரம் இதுதான்,"பணம் போட்ட 3வருஷத்துல டபுள் ஆயிடுங்க,3வருஷம் பணம் கட்டினா போதும் அப்பரம் நீங்க பணத்த எடுத்துக்கலாம்"இதைச்சொல்ல அவர்களுக்கு வெக்கமாக இருக்காது.ஏனெனில் நீங்கள் கட்டும் பணத்திலிருந்து வரும் கமிஷன் தான் அவர்களின் வருவாய்.எனவே தன் கஸ்டமர்களை கவர்ந்திழுக்கும் பேச்சு தான் அவர்களிடம் இருக்கும்.கண்டிப்பாக 3 ஆண்டுகளில் அந்த பாலிசி முடியாது.நாம் ஒரு பாலிசி எடுக்கிறோம்.முதல் ஆண்டு கட்டிவிட்டோம் அடுத்த ஆண்டு கட்ட முடியாத நிலை.உடனே நாம் சென்று இனிமே என்னால கட்ட முடியாது.நா பாலிசியை முடித்துக்கொள்கிறேன்.என்றால்,அதற்கு அந்நிறுவனம்,குறைந்த பட்சம் தொடர்ந்து மூன்று ஆண்டு கட்டினால் தான்,தாங்கள் கட்டிய தொகையே திருப்பிக்கிடைக்கும் என்பர்.இவ்வாறு,10.15,20 ஆண்டுகளுக்கு பாலிசி எடுத்துவிட்டு தொடர முடியாதவர்களுக்கு 3 வருடம் கட்டியிருந்தா பரவாயில்லை.நீங்கள் கட்டிய பணத்தை தருகிறோம் என நமக்கு ஒரு சலுகை வழங்கியுள்ளது காப்பீட்டு ஆணையம்.ஆனால் இதை ஆயுள் காப்பீட்டு முகவர்கள் யூலிப் பாலிசியில் மூன்று ஆண்டு பணம் கட்டினால் போதும் என்று ஒரு பொய்யான தோற்றத்தை ஏற்படுத்திவிட்டனர்.இதனால் இன்று பல பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்.இந்த ப்ரச்சனை அரசின் காப்பீட்டு நிறுவனமான LICயில் மிக மிக அதிகம்.அவர்களின் யூலிப் பாலிசியை வாங்கியுள்ள மக்களின் 100ல் 98 பேருக்கு அதன் முழு விபரமும் தெரியாது.இதற்கு யார் காரணம்.காப்பீட்டு நிறுவனமா?காப்பீட்டு முகவர்களா? விடை நீங்கள் தான் சொல்லவேண்டும். (கொசுறு: வருகின்ற ஜூலை-2010 முதல் எடுக்கப்படும் யூலிப் பாலிசிகள் அனைத்தும் 5ஆண்டுகளுக்குப்பிறகே எடுக்கமுடியும் என புதிய அறிவிப்பினை காப்பீட்டு ஒழுங்குமுறை ஆணையம் IRDA அறிவித்துள்ளது)

1 comments:

ஆலயம்,ஆகமம்,ஆதிசைவர் said...

ஆஹா,மிக அருமையான பதிவு.இந்த தகவலை நான் இப்போதுதான் தெரிந்துகொன்டேன்.தொடருங்கள்,வாழ்த்துக்கள்

Post a Comment