Tuesday, April 27, 2010

அரசு பேருந்து நடத்துனர்களின் அடாவடித்தனங்கள்...




அரசு பேருந்து நடத்துனர்களின் அடாவடித்தனங்கள்..................

நண்பர்களுக்கு வணக்கம்.
இந்த பதிவு முற்றிலும் நான் கண்ட அனுபவமே.

நான் சில தினங்களுக்கு முன் சேலத்திலிருந்து சிதம்பரம் செல்வதற்காக விழுப்புரம் கோட்டத்தை சார்ந்த சிதம்பரம் பணிமனையை சார்ந்த அரசுப்பேருந்தில் இரவு 11மணி அளவில் ஏறி
அமர்ந்தேன்.அந்த பேருந்து
இருதினங்களுக்கு முன் தான் புதியதாக விடப்பட்ட புது பேருந்து.அதில் சீட் கவர் கூட கிழியாமல் புதிதாகவே இருந்தது.அப்போது ஒருவர் துணி பன்டல்களுடன் பஸ்சில் ஏறினார்.அதை பார்த்த கண்டக்டர்,"யோவ் இதையெல்லாம் ஏத்தாத"
அதற்கு அந்த பயனி,"ஏன் சார்! லக்கேஜ் வாங்கிடரேன்",
அதற்கு கண்டக்டர்,"அந்த மூட்டையை சீட்டில வச்சி சீட்டிய கிழிச்சிட்டு பூடுவ,அப்பரம் நால்ல பதில் சொல்லனும்",அதற்கு பயணி."சார்,இது துணிதான்.இதனால சீட் ஒன்னும் ஆகாது"என்றார்.அதற்கு அந்த நடத்துனர்,"யோவ் நா 25வருஷமா கார்ப்பரேஷன்ல இருக்கரன் எனக்கு நீ சொல்றியா"என்றார்.பிறகு நீண்ட விவாதத்திற்கு பிறகு பயணி பேருந்தில் ஏற அனுமதிக்கப்பட்டார்.பிறகு வண்டி பேருந்து நிலையத்திலிருந்து நகரத்தொடங்கியது.கண்டக்டர் டிக்கெட் வழங்கிக்கொண்டு வந்தார்.ஒரு பயணி அடரி ஒரு டிக்கெட் என்றார்.(குறிப்பு:அடரி என்பது சேலத்திலிருந்து 3.30மணி பயன நேரம்)அதற்கு அந்த நடத்துனர்,"யோவ் தூங்காம வரனும்.ஊர் வந்தா நீ தான் எழுந்துவரனும்.நா கூப்பிடமாட்டேன்.அப்புடி தூங்கிட்டா எங்க எரங்கரயோ அதுக்கு இன்னொரு டிக்கட் வாங்கிடுவேன்.இஷ்டமில்லன்னா எரங்கிக்கோ "என்றார்.அதற்கு பயனி செத்த ஒரு கொரல் குடுங்க நான் வந்துடுவேன் என்றார.ஆனால் நடத்துனரோ,"நீ தூங்கிகிட்டு வருவ நா முழிச்சிகிட்டு வரனுமா,எழுப்பல்லாம் முடியாது"என்றார் கராராக.உடனே பயணிக்கு ஆத்திரம் வந்தது,"என்னாயா முடியாது,முடியாதுங்கர,எனக்கு அந்த ஊரே தெரியாது.அந்த ஊர் வந்தா சொல்லு ன்னு சொன்னா முடியாதுன்னுதான் சொல்லுவியா"என்று தனக்கே உரிய பானியில் பேச நடத்துனர் செய்வதரியாது சரி..சரி..எழுப்பலாம் மாட்டேன்.அடரி வந்தா,அடரி வந்தாச்சுன்னு என் எடத்துலேந்துதான் சொல்லுவேன்.என்று கூறி நகர்ந்தார்.

எனது கேள்விகள்:
1,பொதுவாக ஒரு பயணியிடம் நடத்துனர் நடக்கவேண்டிய முறை என்ன?
2.பேருந்து சீட்டின் மீது அக்கரை செலுத்தும் நடத்துனர்.பயணியும் காசு கொடுத்துதானே பயணிக்கின்றனர்.இதை ஏன் அவர்கள் மறந்துவிடுகின்றனர்.
3.இது போன்ற இரவு நேர பயணங்களில் அந்தந்த ஊர் வந்ததும் பயணிகளுக்கு ஏன் அறிவுருத்துவது இல்லை?நடத்துனர் யாரையும் எழுப்பவேண்டாம் இன்றய கம்பியூட்டர் டிக்கட் மெஷினில் ஒரு ஊரில் எவ்வளவு பேர் இறங்குகின்றனர் என தெரியும்.எனவே நடத்துனர் அவர் இடத்திலிருந்தே ஊரின் பெயரை 5,6 முறை உரக்க சொல்லி வந்துவிட்டதாக கூறினால்.சம்மந்த பட்ட பயணிகள் எழுந்துவிடுகின்றனர்.மாறாக இரவு நேரங்களில் டிக்கட் போட்டு முடித்த உடன் நடத்துனரும் தூங்குகிரார்கள்.இது தான் முறையா?இது குறித்து சட்டம் என்ன சொல்கிறது?

*சம்பவம் 2:*

இரு தினங்களுக்கு முன் நான் அரியலூரிலிருந்து சென்னை செல்லும் விழுப்புரம் கோட்ட அரசுப்பேருந்தில் பகலில் பயணித்தேன்.பஸ் 2மணி அளவில் விக்ரவான்டி அருகே ஒரு உணவகத்தில் நின்றது.15 நிமிடத்திற்கு பிறகு புறப்பட்டது.அப்போது ஒரு இளைஞர் ஒடி வந்து,"சார்,நா வந்த பஸ் போயிடுச்சி அதுவும் நெய்வேலி பெரியார் தான்அதனால நா இதுல ஏரிகிறேன்"என்று ஏறினார்.ஆனால் நடத்துனர்,நீ இதில் தனியாக டிக்கெட் வாங்கவேண்டும் என்றார.அந்த இளைஞரொ டிக்கெட்டை காண்பித்து,இவை இரண்டும் விழுப்புரம் கோட்டத்தை சார்ந்த அரசு பஸ் தானே,பிறகு ஏன் என்றும் தான் தவற விட்ட பஸ்சில் தனக்கு 50ரூ சில்லரை பாக்கி தரவேண்டும் என்றும் கூறினார்.ஆனால் நடத்துனரோ,பயணம் செய்த பேருந்திலிருந்து வேறு பேருந்தில் பயணம் செய்ய அந்த பஸ் நடத்துனர்,அந்த டிக்கெட்டில் காரணம் குறித்தால் மட்டுமே ஏற்கமுடியும் என்றும்.எனவே திண்டிவனம் வரை நீ டிக்கெட் வாங்கிக்கோ.அங்க நீ வந்த பஸ் இருந்தா ஏறிக்கோ என்று கூறி டிக்கெட் குடுத்தார்.ஆனால் அதிகம் கொள்ளை அடிக்க பெயரளவில் EXPRES BUS ஆக இருந்த எங்கள் பஸ் மந்த வேகத்தில் சென்றதால் திண்டிவனத்தில் அவரால் அந்த பஸ்சை பிடிக்கமுடியவில்லை.இதனால் அவருக்கு.
1.விக்ரவாண்டி ஓட்டல் TO சென்னை டிக்கட் நஷ்டம்
2. ரூ50 சில்லரை பாக்கி நஷ்டம்
3. செல்ல வேண்டிய இடத்திற்கு குறிப்பிட்ட நேரத்திற்கு செல்லமுடியாமை.
இதற்குக்காரணம் என்ன?

எனது கேள்விகள்.
1.இதுபோன்ற பயண உணவகங்களில் பஸ் நிற்கும்போது எவ்வளவு நேரம் பஸ் நிற்கும் என்பதை பல நடத்துனர்கள் ஏன் சொல்வதில்லை?
2.இதுபோன்ற உணவகங்களில் பஸ் நிற்கும் முன் எவ்வளவு பயணிகள் இருந்தனர் என்பதையும் பஸ் புறப்படும்போது அத்தனை பயணிகளும் வந்துவிட்டனரா?என ஏன் பல நடத்துனர்கள் சரிபார்ப்பதில்லை?அப்படி நபர் குறைந்தால் அவரை தேடி ஏற்றாமல் இவர்கள் எப்படி பஸ்சை எடுத்துச்செல்லலாம்?இப்படிதான் அரசு சட்டம் சொல்கிறதா?
3.அப்படி பயணி பஸ்சை தவறவிட்டால் அவர் செல்லவேண்டிய இடத்திற்கு அதே டிக்கெட்டை வைத்து வேறு பஸ்சில் பயணிக்க என்ன செய்யவேண்டும்?
4.இதுபோல் அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் பயணிகளுக்கு ஏற்படும் ப்ரச்சனைகளுக்கு தீர்வுகான எங்கு புகார் செய்யவேண்டும்?

இந்த பதிவு நான் கண்ட அனுபவமே.இதுபோல் யாரும் துன்பம் அடையாமல் இருக்கவே இதை பதிந்தேன்.இதில் நான் இட்டுள்ள வினாக்களுக்கு விடை தெரிந்த நண்பர்கள் இதில் மறுமொழி இடவும்.அது அனைவருக்கும் பலன் தரும்.நன்றி.

2 comments:

Anonymous said...

நீங்க என்னை மாதிரின்னு நினைக்கிறேன்.

வாழ்த்துக்கள்

Admin said...

Naan tharpothu ahmedabathil irukkiren, ingu ulla mariyadhai kooda thamilnattu perunndthil kidaikkamattengirathu.

Post a Comment